மட்டு. மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி காலமானார்

மட்டக்களப்பு மாவ ட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளரும் ஈழத்தின் பிரதான எழுத்தாளருமான கதிராமன் தங்கேஸ்வரி நேற்றுமுன்தினம் (26) காலமானார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இவர் தனது 67 ஆவது அகவையில் இயற்கை எய்தினார்.

படுவான்கரையின் மண்முனை மேற்குப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கன்னங்குடாவில் 26.02.1952 இல் பிறந்த இவர் மட்டக்களப்பு ஆனைப்பந்தி மற்றும் வின்சன்ட மகளிர் பாடசாலைகளில் உயர் கல்வி கற்று, தொல்லியலில் சிறப்புப் பட்டம் பெற்றார்.

இவர் இந்துக் கலாசார திணைக்களத்தில் பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தராகவும், கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைப் பகுதியில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

விபுலானந்தர் தொல்லியல் குளக்கோட்டன் தரிசனம், மாகோன் வரலாறு, மட்டக்களப்பு கலைவளம், கிழக்கிலங்கை வரலாற்றுப் பாரம்பரியங்கள், கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு ஆகிய நூல்களையும் எழுதி இவர் வெளியிட்டுள்ளார்.

2004ஆம் ஆண்டு முதல் 2010 வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றத்தில் ஐந்து வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு விசேட நிருபர்

Mon, 10/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை