ஒப்சேர்வர் - மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் விருது விழா இன்று

பிரதம அதிதியாக பங்கேற்கும் அரவிந்த டி சில்வா

சிறந்த வீரர் கமில் மிஷ்ராவா, ரொஹான் சஞ்சயவா?

நான்கு தசாப்தகாலமாக பாடசாலை கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த வீரரை தேசிய மட்டத்திற்கு கொண்டுசென்ற முக்கிய விருது ஒப்சேவர்- மொபிடெல் வருடாந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று (20) ஹில்டன் ஹோட்டலில் விமர்சையாக நடைபெறும். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் அரவிந்த டி சில்வா, ஸ்ரீலங்கா டெலிகொம் -மொபிடெல் நிறுவன தலைவர் பி.ஜி குமாரசிங்க சிறிசேன, லேக் ஹவுஸ் நிறுவன தலைவர் கிரிஷாந்த குரே ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தேசிய கிரிக்கெட்டின் வாசலுக்கு பாடசாலை கிரிக்கெட் வீரர்களை அழைத்துச் செல்லும் அபிமானமிக்க விருது வழங்கும் விழா 41வது தடவையாக இம்முறை நடைபெறுகின்றது. தேசிய பத்திரிகை உலகின் ஆரம்ப நிறுவனமான வரையறுக்கப்பட்ட அஸோஸியேடட் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் (லேக்ஹவுஸ்) ஒப்சேர்வர் ஞாயிறு பத்திரிகையுடன் கைத்தொலைபேசி வலையமைப்பின் மொபிடெல் நிறுவனமும் இணைந்து நடத்தும் இவ்விருது விழாவுக்கு மொபிடெல் அனுசரணையை 12வது முறையாக வழங்குகிறது.

இன்றுவரை ஒப்சேர்வர் – மொபிடெல் வருட பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருது விழாவில் வருடத்திற்கான சிறந்த பாடசாலை வீரருக்கான விருதை பெற்று தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவம் செய்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றிபெற்ற வீரர்கள் பலர் உள்ளனர்.

அவர்களில் 1979ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடசாலை கிரிக்கெட் விளையாட்டு வீரராக முதன் முதலாக விருதுபெற்ற ரோயல் கல்லூரியின் ரஞ்சன் மடுகல்ல தொடக்கம் கடந்த வருடம் அவ்விருதினை பெற்ற திருத்துவக் கல்லூரியின் ஹசித போயகொட வரை புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பலர் உள்ளார்கள். சிறந்த நடுவர்கள் குழுவால் தெரிவு செய்யப்பட்டு 2018/19 பாடசாலை கிரிக்கெட் போட்டிகளில் திறமையாக விளையாடிய வீரர்கள் இவ்விருதுக்காக தெரிவு செய்யப்பட்டு இன்றிரவு விருது தேசிய விருது முதலாவது குழு இண்டாவது குழு மூன்றாவது குழு என பாடசாலை குழுமட்டத்திலாகும். அதைத் தவிர வருடம்தோறும் லேக்ஹவுஸ் வாசகர்களால் வாக்குகள் அளிக்கப்பட்டு வருடத்தின் பிரபல பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதும் பாடசாலை கிரிக்கெட் வீரர் இரண்டாமிடம் பெற்றவருக்கும் விருது வழங்கப்படும்.

அதேபோல் கடந்த வருடம் ஒப்சேர்வர் – மொபிடெல் வருடத்தின் பாடசாலை விளையாட்டு வீரர் விருது விழாவின் சரித்திரத்தில் முதற் தடவையாக அறிமுகம் செய்யப்பட்ட கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதும் இம்முறை வழங்கப்படவுள்ளது. அவ்விருது கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டதோடு இந்நாட்டின் கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் மூன்று விருதுகள் வழங்கப்படுவதோடு இம்முறை வருட பாடசாலை கிரிக்கெட் வீராங்கனை விருதும் இணைக்கப்பட்டுள்ளது.

அரவிந்த டி சில்வா

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பெற்ற மிகச் சிறந்த விருதான 1996 உலக கிண்ண கிரிக்கெட்டில் மூன்று துறைகளிலும் சிறப்பாக விளையாடியவராக அரவிந்த டி சில்வாவை குறிப்பிடலாம். அப்போட்டி தொடரில் சனத் ஜயசூரிய சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டாலும் இலங்கை அணி விளையாடிய ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளில் அரவிந்தவே சிறப்பாட்டக்காரராவார்.

 அதில் இறுதிப் போட்டியும் அரையிறுதிப் போட்டியும் அடங்கும். லாகூர் கடாபி மைதானத்தில் வெற்றிக்காக 243 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் மைதானத்திற்குள் நுழைந்த இலங்கை முதலாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கட்டுக்களுக்கு 23 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் அசங்க குருசிங்கவுடன் இணைந்து இறுதிவரை ஆட்டமிழக்காது 107 ஓட்டங்களைப் பெற்றார். 1979ம் ஆண்டு விவியன் ரிச்சர்ட்ஸுக்கு பின்னர உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சதமடித்த முதலாவது வீரர் என்ற பெருமையை அரவிந்த டி சில்வா பெற்றார். அப்போட்டியில் அவுஸ்திரேலியாவின் மூன்று விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்.

அரவிந்தவின் பெயரில் நிறைய சாதனைகள் எழுதப்பட்டுள்ளன. அவர் 1984ம் ஆண்டு தொடக்கம் 2003ம் ஆண்டுவரை இலங்கை தேசிய அணியில் பிரதிநிதித்துவம் வகித்தார். அக்காலப் பகுதியில் 93 டெஸ்ட் போட்டிகளிலும் 308 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆறு டெஸ்ட் போட்டிகளுக்கும் 18 ஒரு நாள் போட்டிகளுக்கும் தலைமை வகித்துள்ளார். 1992ம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் இலங்கை அணியின் தலைவராவார்.

Fri, 09/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை