2019: காலாண்டில் 3.7 பொருளாதார வளர்ச்சி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2019முதல் காலாண்டில் 3.7சதவீதமாக பதிவாகியுள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.  

நிலையான விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019முதல் காலாண்டில் 2,326,273மில்லியன்களாக பதிவாகியுள்ளதுடன், 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2,242,552மில்லியன்களாக பதிவாகியுள்ளது.  

பொருளாதாரத்தின் நான்கு பிரதான பகுதிகளான விவசாயம், கைத்தொழிற்துறை, சேவை மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீதான மானியங்கள் கழிக்கப்பட்ட வரிகள், நடப்பு விலைகள்மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இக்காலாண்டில் முறையே 6.9, 31.6, 53.9, 7.7 சதவீதங்கள் என்ற அடிப்படையில் முறையே பங்களிப்பைச் செய்துள்ளன. 2018ஆம் முதல் காலாண்டில் பதிவான 5.1 சதவீத விரிவாக்கத்துடன் ஒப்பிடும்போது விவசாய நடவடிக்கைகள் இக்காலாண்டில் 5.5 சதவீதமாக விரிவடைந்துள்ளது.  

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Sat, 06/22/2019 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை