அல்-அஷ்ரக் பழைய மாணவர் சங்க கிரிக்கெட் போட்டி 2015 ம் ஆண்டு அணி சம்பியன்

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினரால் வருடா வருடம் கொண்டாடப்படும் பழைய மாணவர்களை ஒன்றுசேர்க்கும் நிகழ்வின் ஒரு அங்கமான கிரிக்கெட் சுற்றுப் போட்டி (15) நிறைவு பெற்றது.

அந்த வகையில் கடந்த 19 வருட அணிகள் பங்குபற்றிய இத்தொடரில் 2013 ம் ஆண்டுப்பிரிவு மற்றும் 2015 ம் ஆண்டுப்பிரிவு அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவாகியிருந்ததோடு 2015 ம் ஆண்டுப்பிரிவு அணி 07 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

ஆரம்பமாக துடுப்பெடுத்தாடிய 2013ம் ஆண்டு அணி 05 ஓவர்கள் நிறைவடைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 49 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பயாஸ் 24 ஓட்டங்களையும், நாஜீத் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததோடு, பந்து வீச்சில் 2015ம் ஆண்டுப்பிரிவு அணி சார்பாக பாரிஸ், ஆதில் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

50 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 2015 ம் ஆண்டுப்பிரிவு அணி 4.2 வது பந்துவீச்சு ஓவர் நிறைவடைவில் 03 விக்கட்டுக்களை இழந்து மேலதிக 07 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

இதில் அவ்வணி சார்பாக ஆதில் 26 ஓட்டங்களையும், நபீர் 08 ஓட்டங்களையும், பெற்று தங்களது அணியின் வெற்றிக்கு துணைபுரிந்தனர்.

இத் தொடரில் 94 ஓட்டங்களைப் பெற்று 05 விக்கட்டுகளைக் கைப்பற்றிய 2013 ம் வருட அணியின் தலைவர் ஏ.ஏ.எம். நாஜீத் தொடர் ஆட்ட நாயகன் விருதை பெற்றுக் கொண்டதுடன், இறுதி போட்டியின் ஆட்ட நாயகன் விருதை 2015 ம் வருட அணியைச் சேர்ந்த 12 பந்துகளில் 26 ஓட்டங்களைப் பெற்று, 06 ஓட்டங்களுக்கு 02 விக்கட்டுக்களை கைப்பற்றிய ஏ.எம். ஆதில் தெரிவானார்.

மேலும் இந்த சுற்று தொடரில் 03 ம் இடம் பெற்ற அணிக்கு 3000 ரூபா பணப்பரிசும், வெற்றிக்கிண்ணமும், 02ம் இடம் பெற்ற அணிக்கு 7000 ரூபா பணப்பரிசும், வெற்றிக்கிண்ணமும், 01 ம் இடம் பெற்ற அணிக்கு 10,000 ரூபா பணப்பரிசும், வெற்றிக்கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இறுதி போட்டி நிகழ்வில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.எம். ஜாபிர் உள்ளிட்ட சிரேஷ்ட பழைய மாணவர்கள், மாணவர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டதோடு நிந்தவூரில் கிரிக்கெட் முதுசம் ஆசிரியர் கே.எல். நூர் முஹம்மட் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம். இப்ராஹிம் பாடசாலை சார்பாக விஷேட ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

(நிந்தவூர் குறூப் நிருபர்)

Thu, 04/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை