கல்முனை ஈகிள்ஸ் விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் புத்தாண்டு விளையாட்டு

தமிழ் புத்தாண்டுப் பிறப்பானது மனித மனங்களை மலர்ச்சி பெறச் செய்யும், தூர்ந்து போன உறவுகளை புதுப்பிக்கும், தமிழர்களின் பாரம்பரிய கலை, கலாசாரம், பண்பாடு, விளையாட்டு, விருந்தோம்பல் என்பவற்றை விருத்தியாக்கும். இந்த வகையில் விகாரி புத்தாண்டு தமிழ் மக்களின் வாழ்வில் சுபீட்சம் நிறைந்ததாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

கல்முனை ஈகிள்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய சித்திரைப் புத்தாண்டு களியாட்ட நிகழ்வு கல்முனை ஸ்ரீ கடற்கரை கண்ணகை அம்மன் ஆலய பூம்புகார் அரங்கில் இவ்விளையாட்டுக் கழக தலைவர் ந.காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை உதவி பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

உடலையும் உள்ளத்தையும் வலிமைப்படுத்துகின்ற கருவியாக விளையாட்டு விளங்குகின்றது. சகிப்புத்தன்மை, பரஸ்பரம், விட்டுக்கொடுப்பு, வெற்றி தோல்விகளை சமமாக ஏற்கின்ற மனப்பக்குவத்தையும் மேலாக மனிதர்களுக்கிடையே ஐக்கியம், சமாதானம் மேலான உறவு வலுவடைய விளையாட்டு என்றென்றும் துணைநிற்கும் என்றார்.

துறைநீலாவணை நிருபர்

Thu, 04/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை