நயினை நாகபூசணி அம்பாள் ஆலய பிரதம குரு இயற்கை எய்தினார்

நயினை நாகபூசணி அம்பாள் ஆலயம், சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குருவும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான சிவஸ்ரீ மஹேஸ்வரக் குருக்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று (24) அதிகாலை இயற்கை எய்தியுள்ளார்.

சிவஸ்ரீ சம்புஹேஸ்வரக் குருக்கள்-மீனாம்பாள் அம்மா தம்பதியரின் புதல்வரான மஹேஸ்வரக் குருக்கள் ஈழத்து சைவ உலகின் பெரும் சொத்து, சர்வதேச இந்துமத குருபீடத்தின் தலைமகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tue, 05/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை