கடன் மற்றும் லீசிங் தவணைகளை செலுத்த முடியாதவர்களுக்கு சலுகை

நாட்டில் நிலவும் கொரோனா சூழ்நிலை காரணமாக அன்றாட வருமானத்தை இழந்து பாதிப்படைந்துள்ள லீசிங் தவணை செலுத்துபவர்கள் மற்றும் கடன் தவணை செலுத்துபவர்களுக்கும் சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அது தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு வேண்டுகோள்கள் வந்து சேர்வதாக அந்த செயலணி  தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க மேற்படி சிக்கல்களுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் வகையில் பிரதமர், நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மேற்படி செயலணி தெரிவித்துள்ளது.

அன்றாட வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் லீசிங் தவணை மற்றும் கடன் தவணைகளை செலுத்துவது தொடர்பில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதனை கவனத்திற்கொண்டு அதற்கான சலுகைகளை வழங்குவதற்கு ஜனாதிபதி செயலணி கவனம் செலுத்தியுள்ளது. பிரதமர், நிதியமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருடன் விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அந்த செயலணி மேலும் தெரிவித்தது.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 05/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை