கொரோனா தொற்று ஈரானில் ஒரு மில்லியனைத் தொட்டது

ஈரானில் கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 மில்லியனைக் கடந்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள பல பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் தளர்த்தத் திட்டமிடும் வேளையில் அண்மைய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், ஈரானில், மேலும் 358 பேர் உயிரிழந்துள்ளனர். 80 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட அங்கு புதிதாகப் 13, 922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மை நாட்களில் மரண எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும், கடந்த மாதம் நாள் ஒன்றுக்கு 400 பேரிடமாவது தொற்று அடையாளம் காணப்பட்டது.

எனினும், அரசாங்கப் புள்ளிவிபரங்களைவிட இன்னும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஈரானின் சுகாதார அமைச்சர் கூறினார்.

இதர நாடுகளைப் போன்றே ஈரானும் தடுப்பு மருந்தைச் சொந்தமாகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மனிதர்களிடம் அதைச் சோதித்துப் பார்ப்பதற்கான உரிமை தடுப்பு மருந்து நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 

எனினும் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை உலகெங்கும் சமமாகப் பகிரும் உலக சுகாதார அமைப்பின் திட்டத்தின் கீழ் ஈரான் சுமார் 16.8 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை முன்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Sat, 12/05/2020 - 11:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை