அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்பின் பெயர் பரிந்துரை

அடுத்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நேர்வேயின் தீவிர வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டியன் டைப்ரிங் ஜெட்டே, டிரம்பின் பெயரை கடந்த புதன்கிழமை பரிந்துரைத்தார். இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையே அண்மையில் ஏற்பட்ட இராஜதந்திர உறவில் டிரம்பின் பங்களிப்புக்காகவே இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

“டிரம்ப் நாட்டில் எவ்வாறு நடந்துகொள்கிறார், ஊடக சந்திப்புகளில் என்ன கூறுகிறார் என்பது விடயமல்ல. அமைதிக்கான நோபல் பரிசை பெற அவருக்கு நிச்சயமாக வாய்ப்பு உள்ளது” என்று டைப்ரிங் ஜெட்டே ஏ.பீ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டின் நோபல் பரிசுக்காகவே டிரம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விருதைப் பெறுவதற்கான பெயர்களை பரிந்துரைக்கும் காலக்கெடு முடிந்திருக்கும் நிலையில் வரும் பெப்ரவரி 1 ஆம் திகதி நோர்வே நோபல் குழுவுக்கு டிரம்ப் தொடர்பான பரிந்துரையை முன்வைக்க முடியும்.

நியாயமாக வழங்குவதென்றால் தமக்கு பல விடயங்களுக்காக நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும் என்று டிரம்ப் கடந்த ஆண்டு குறிப்பிட்டிருந்தார்.

Fri, 09/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை