உலகெங்கும் விநியோகிப்பதற்கு 8,000 ஜம்போ ஜெட்கள் தேவை

கொவிட்–19 தடுப்பு மருந்து:

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உலகெங்கும் எடுத்துச் செல்வது விமானப் போக்குவரத்தில் பெரும் சவாலாக அமையும் என்று விமானத் துறையினர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்துகளை எடுத்துச் செல்வதற்கு 8,000 பொயிங் 747 விமானங்களுக்கு இணையான அளவு விமானங்கள் தேவைப்படும் என்று சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து இன்னும் தயாராகாதபோதும் அதனை எடுத்துச் செல்வது குறித்து விமானசேவைகள், விமான நிலையங்கள், உலக சுகாதார நிறுவனங்கள் மற்றும் மருந்தக நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கம் ஏற்கனவே பணிகளை ஆரம்பித்துள்ளது.
ஒருவருக்கு ஒரு முறை மாத்திரமே மருந்து வழங்கப்படும் வகையிலேயே விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தடுப்பு மருந்தை எடுத்துச்செல்ல எல்லா ரக விமானங்களும் ஏற்றவை அல்ல. அதற்கு விமானத்தினுள் வெப்பநிலை 2லிருந்து 8 டிகிரி செல்சியஸாக இருக்க வேண்டும்.
தடுப்பு மருந்துக்கான அங்கீகாரம் கிடைத்தவுடன் அவற்றின் விநியோகத்திற்கு இப்போதே திட்டமிடும்படி அரசாங்கங்களுக்கு சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கம் ஆலோசனை கூறியுள்ளது.
“கொவிட்–19 தடுப்பு மருந்துகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வது உலக சரக்கு விமானத் துறையில் இந்த நூற்றாண்டின் பெரும் சவாலாக அமையும். எனினும் அவதானம் கொண்ட நவீன திட்டம் இன்றி இது நடக்காது. அதற்கு இதுவே நேரம்” என்று குறித்த சங்கத்தின் தலைமை நிர்வாகி அலெக்சாண்ட்ரே டி ஜூனியக் தெரிவித்துள்ளார்.

Fri, 09/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை