கோட்டா வந்தால் முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றவர்கள் இன்று வாயடைத்துள்ளனர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு இன்னல்கள், பிரச்சினைகள் வரும் என பொய் சொன்னவர்கள் இன்று வாயடைத்துப்போயுள்ளனர். அந்தளவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகளை அனைத்து மக்களும் போற்றுகின்றனர் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி தெரிவித்தார்.

ஸ்டேண்ட் அப் வித் பிரசிடண்ட்“ ( ஜனாதிபதியை பலப்படுத்துவோம் வேலைத்திட்டம்) அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் கூறுகையில், இப்போது தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் என அனைவரும் சேர்ந்து இனவாத கட்சிகளை ஒதுக்கி தேசிய ரீதியில் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய பொறிமுறையை ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகின்றோம். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள், அறிஞர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், உலமாக்களென அனைவரையும் இணைத்து தேசிய தலைமைத்துவ சபையை உருவாக்கி அதனுாடாக முஸ்லிம்கள் அரசுக்கு நெருக்கமானவர்களாகவும் அரசின் பங்காளிகளாகவும் ஆக்க முயற்சிக்கும் பணிகளை முன்னெடுத்துள்ளோம் என்றார்.

கொழும்பு கோட்டை தினகரன் நிருபர்

Sat, 02/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை