இலவன் ஸ்டார் கழகம் வெற்றி

கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகக் கழகங்களுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் தலைமையில் பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் அட்டாளைச்சேனை மாக்ஸ்மேன்(Marksman) விளையாட்டுக் கழகமும் தெரிவு செய்யப்பட்டது.

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 32 கழகங்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். 5 ஓவர் 11 பேர் என்ற அடிப்படையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மாக்ஸ்மேன் அணியினர் குறிப்பிட்ட ஓவர் நிறைவில் 6விக்கட் இழப்பிற்கு 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.பதிலுக்கு வெற்றி பெற துடுப்பெடுத்தாடிய ஒலுவில் இலவன் ஸ்டார் அணியினர் 3.2 ஓவர் நிறைவில் 4 விக்கட்டுகளையும் இழந்து 45 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கட்களினால் வெற்றிபெற்று அம்பாறை மாவட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இறுதிப்போட்டியில் மாக்ஸ்மேன் அணியின் வசீம் 19 ஓட்டத்தினைப் பெற்றதுடன் நௌசாத் 3ஓட்டங்களை வழங்கி 4 விக்கட்டினையும் வீழ்த்தினார். இலவன் ஸ்டார் அணி சார்பாக றஸ்மி 31 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு வழிவகுத்தார். இவ்வாண்டுக்கான அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலவன் ஸ்டார் அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை, இரண்டாமிடம் பெற்ற மாக்ஸ்மேன் அணியினர் வெள்ளிப்பதக்கத்தையும் தனதாக்கிக் கொண்டனர்.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

Fri, 02/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை