இந்தியாவில்தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக அதிகம் - பாக். கிரிக்கெட் சபை தலைவர்

பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதை நாங்கள் நிரூபித்து விட்டோம் என்று அந்நாட்டு கிரிக்கெட் சபை தலைவர் ஏசான் மானி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மண்ணில் கடந்த 2009-ம் ஆண்டுக்குப்பின் தற்போது 10 வருடங்கள் கழித்து டெஸ்ட் தொடர் நடைபெற்றது. எந்த அணி அங்கு விளையாடும்போது தாக்குதல் நடத்தப்பட்டதோ, அந்த அணியே தற்போது பாகிஸ்தான் சென்றது.

டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 1-0 எனக் கைப்பற்றியது. இதனால் பெரும்பாலான அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கையை தொடர்ந்து உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் கீழ் பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் சென்று விளையாட இருந்தது. கடைசி நேரத்தில் பாதுகாப்பை காரணம் காட்டி வங்காளதேசம் பாகிஸ்தான் செல்ல மறுத்தது.

இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ஏசான் மானி இந்தியா மீது தாக்கியுள்ளார்.

இதுகுறித்து ஏசான் மானி கூறுகையில் ‘‘பாகிஸ்தான் பாதுகாப்பானது என்பதை நாங்கள் நிரூபித்து விட்டோம். எந்த அணி பாகிஸ்தான் வர மறுக்கிறதோ, அந்த அணி இங்கு பாதுகாப்பை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த நேரத்தில் பாகிஸ்தானை விட இந்தியா மிகமிக அதிகமான பாதுகாப்பு அச்சுறுத்தல் நாடு.

இலங்கை தொடருக்குப்பின் எந்தவொரு நாடும் பாதுகாப்பு ஏற்பாட்டை பற்றி கவலைப்பட முடியாது. பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற இது திருப்புமுனை. மீடியாக்களும், ரசிகர்களும் உலகளவில் பாகிஸ்தானை நேர்மறையாக காட்டுவதற்கு முக்கிய பங்காற்றினர்’’ என்றார்.

Wed, 12/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை