ஆஸி 179 ஓட்டங்கள் முன்னிலை

சரங்க லக்மால் 75/5 விக்கெட்டுகள்

இலங்கை அணிக்கு எதிராக பிரிஸ்பேன் நகரில் இடம்பெற்று வரும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டையும் இழந்து 323 ஓட்டங்களை குவித்தது.இலங்கை அணியை விட 179 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது ஆஸி அணி.

அவ்வணி நேற்றுமுன்தினம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்களை பெற்றிருந்தது.அவ்வணியின் ஹரீஸ் 44 ஓட்டங்களையும் பேர்ன்ஸ் 15 ஓட்டங்களையும் கவாஜா 11 ஓட்டங்களையும் லயன் ஒரு ஓட்டத்தையும் லபுஸ்சான்ஜ் 81 ஓட்டங்களையும் ரவிஸ் ஹேட் 84 ஓட்டங்களையும் பட்டர்சன் 30 ஓட்டங்களையும் டிம் பெயின் ஓட்டம் எதுவும் பெறாமலும் கமின்ஸ் ஓட்டம் எதுவும் பெறாமலும் மிஜ்சல் ஸ்டார்க் 26 ஓட்டகளையும் ஆட்டமிழக்காமல் பெற்றார்.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் லக்மால் 75 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டையும் குமார,சமீர, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் டில்ருவன் பெரேரா இரண்டு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டையும் இழந்து 144 ஓட்டங்களை பெற்றது.பந்து வீச்சில் ஆஸி சார்பாக கமின்ஸ் 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டையும் றிச்சட்சன் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டையும் பதம் பார்த்தனர். இலங்கை அணி சார்பாக திக்வெல்ல பெற்ற 64 ஓட்டங்களை தவிர வேறு எவரும் அதிகூடிய ஓட்டங்கள் பெற வில்லை என்பபது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்ப விக்கெட்டை பறி கொடுத்தது. இலங்கை அணி 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது. இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய கருணாரத்ன 3 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் திரிமான்ன 6 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். பந்து வீச்சில் கமின்ஸ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இலங்கை அணி ஆஸி அணியை விட 162 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இன்னும் மூன்று நாட்கள் மீதமாகவுள்ளது.அவுஸ்திரேலிய துடுப்பாட்டவீரர்கள் எவரும் இந்த வருடத்தில் 9 இன்னிங்ஸில் சதம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லக்மால் பெற்ற 5 விக்கெட் இது மூன்றாவது தடவை என்பது தெரிந்ததே.

இன்று போட்டியின் மூன்றாம் நாளாகும்.

Sat, 01/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை