ஒனலனடன வணணபப கடடணம வரவல கறபப

- கடவுச்சீட்டுக்கான ஒருநாள் சேவை கட்டணம்
- ரூ.5,000 குறைக்க நடவடிக்கை 


ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கடந்த ஒன்பது தினங்களில் 9158 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹவர் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு இதுவரை காலமும் பெறப்பட்டு வந்த 20,000 ரூபா கட்டணத்தை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் மூலம் ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்கும் போது, 15 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் வேலைத் திட்டம், கடந்த (15) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், ஒன்லைன் மூலமாக விண்ணப்பிப்போர் வழமையான முறைமையின் கீழ், 14 நாட்களுக்குள் தமக்கான கடவுச் சீட்டை பெற்றுக் கொள்ள முடியும்.

விசேட சேவை மூலம் இதனை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிப்பவர்கள், கொரியர் சேவை மூலம் மூன்று தினங்களில் இதனைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 06/26/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை