ரஷய பதகபப அமசசர சரகய மதலமற பதவளயல தறறம

ரஷ்யாவில் வாக்னர் கூலிப்படை தலைவர் யெவ்கனி பிரிகொசின் தனது கிளர்ச்சியை கைவிட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சொய்கு முதல் முறை பொதுவெளியில் தோன்றியுள்ளார்.

உக்ரைனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய துருப்புகளை செர்கெய் சந்திக்கும் சிறிய வீடியோ பதிவு ஒன்று நேற்று (26) வெளியானது.

எனினும் வாக்னர் படையினர் மொஸ்கோவை நோக்கிய தனது பயணத்தில் இருந்து வாபஸ் பெற்றது தொடக்கம் அந்தத் தனியார் படையின் தலைவர் பிரிகொசின் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டி இன்னும் பொது வெளியில் தோன்றவில்லை.

வாக்னர் படையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் தமது முகாம்களுக்கு திரும்பியதோடு, பிரிகொசின் அண்டை நாடான பெலாரஸுக்கு செல்ல இணங்கினார்.

ஆயுத கிளர்ச்சியை அடுத்து அறிவிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மொஸ்கோ மேயர் நேற்று (26) ரத்துச் செய்தார்.

உக்ரைன் போர் விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் செர்கெய்வுக்கு வாக்னர் தலைவருக்கும் இடையிலான முறுகலை அடுத்தே அந்தக் கூலிப்படை கிளர்ச்சியை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. உக்ரைனின் உண்மையான நிலை குறித்து செர்கெய் ஜனாதிபதியிடம் பொய் கூறுகிறார் என்று பிரிகொசின் குற்றம்சாட்டியிருந்தார்.

ஜனாதிபதிக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்படும் செர்கெய் முன்னர் புட்டினுடன் சைபீரியாவில் மீன்பிடிப்பது மற்றும் வேட்டைகளில் ஈடுபட்டு வந்தவராவார். புட்டினுக்கு அடுத்தவர் என்றும் அவர் கருதப்பட்டு வந்தார்.

Tue, 06/27/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை