ரஷயவலரநத பரகஷன கழவனர பனவஙகனர

- 24 மணிநேர பரபரப்பு முடிவுக்கு வந்தது

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவைக் கைப்பற்றப் போவதாக அறிவித்திருந்த வாக்னர்குழு, திடீரென தனது முடிவை மாற்றி பின்வாங்கியுள்ளதால் 24 மணி நேரம் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட வாக்னர் குழுவுக்கும், ரஷ்ய இராணுவத்துக்குமிடையேயான மோதல் போக்கு நிலவுகிறது.

இதையடுத்து, எதிர்பாராத விதத்தில் அக்குழு ரஷியாவுக்கு எதிராகத் திரும்பி, ரஷ்யாவின் தென் பகுதியில் அமைந்துள்ள இராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றியதாக அறிவித்தது.

ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்துபவர்கள் தேசவிரோதிகளாக கருதப்பட்டு கடும் நடவடிக்கைக்கு ஆளாவார்களென விளாடிமிர் புட்டின் அதிரடியாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும் புட்டினின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத பிரிகோஷின், தலைநகர் மொஸ்கோவையும் கைப்பற்றப் போவதாக அறிவித்து தனது இராணுவ அணிவகுப்பையும் நடத்தினார்.

இதையடுத்து, ரஷ்யாவின் நட்பு நாடான பெலரசின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லூகாஷென்ஸ்கோ, வாக்னர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சமரச முயற்சியின்படி, பிரிகோஷின் பெலரசுக்கு செல்ல இருப்பதாகவும், ஆயுதப்புரட்சி முடிவுக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதேநேரம், பிரிகோஷின் மற்றும் அவரது படையினர் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கு கைவிடப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

Mon, 06/26/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை