நவீன் திசாநாயக்கவுக்கு விரைவில் ஆளுநர் பதவி

UNP ருவன் விஜேவர்தன தெரிவிப்பு

முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு ஆளுநர் பதவியொன்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் அவருக்கான ஆளுனர் பதவி நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படலாம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 06/12/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை