மூன்று வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து; சாரதிகளின் நிலை கவலைக்கிடம்

களுத்துறை,குடா வஸ்கடுவை பகுதியில் நேற்று பகல் ஒரு மணி அளவில் மூன்று வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயங்களுக்கு உள்ளான சாரதிகள் இருவர் ஆபத்தான நிலையில் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இவ்விபத்தில் மூன்று வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றை, களுத்துறை குடா வஸ்கடுவை பகுதியில் முந்திச் செல்ல முற்பட்ட மண் ஏற்றிய டிப்பர் வாகனம் ஒன்று முன்னால் வந்த பாரிய கொள்கலனுடன் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளாகி உயிராபத்தான நிலையில் டிப்பர் ரக வாகன சாரதியும் கொள்கலன் வண்டியின் சாரதியும் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கொழும்பு காலி வீதியில் சுமார் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்ததுடன் மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதியும் இதே பகுதியில் இரு பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அறுவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறை சுழற்சி நிருபர்

Thu, 10/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை