காட்டுக்குள் 40 நாட்கள் தனியே உயிர் தப்பிய சிறுவர்கள் மீட்பு

கொலம்பியாவின் அமேசன் காட்டில் பல வாரங்கள் தனியே உயிர் தப்பிய நான்கு சிறுவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமது குடும்பத்தினருடன் இணைந்துள்ளனர்.

உடன்பிறந்தவர்களான 13, ஒன்பது, ஐந்து மற்றும் ஒரு வயதுடைய இந்த சிறுவர்களின் உடல் நிலை பலவீனமாக இருந்த நிலையில் தமது குடும்பத்தினரை கண்டு மகிழ்ச்சியுடன் உள்ளதாக அவர்களின் தாத்தாவான பிடன்சியோ வலென்சியா தெரிவித்துள்ளார்.

அவர்கள் மிகக் குறைவாகவே பேசுவதாகவும் இருவர் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காட்டில் இராணுவத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஒரு மாதத்திற்கு மேல் தேடுதல் நடத்திய நிலையில் இந்த நான்று சிறுவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை (09) கண்டுபிடிக்கப்பட்டனர்.

அவர்கள் சென்ற விமானம் கடந்த மே 1ஆம் திகதி விபத்துக்குள்ளானதை அடுத்தே இந்த சிறுவர்கள் காணாமல்போயினர். இவர்களின் தாய் மற்றும் இரு விமான ஓட்டிகளும் அந்த விபத்தில் கொல்லப்பட்டனர்.

காட்டுக்குள் சிறுவர்களின் காலடித் தடங்கள் மற்றும் இவர்கள் கடித்து வீசிய பழங்கள் என உயிருடன் இருப்பதற்கான அடையாளங்கள் தெரிந்ததை அடுத்தே தீவிர தேடுதல் இடம்பெற்றது. இதில் மூத்தவரான 13 வயது லெஸ்சி என்ற சிறுமி மற்ற சிறுவர்களை காட்டுக்குள் வழிநடத்தி உள்ளார்.

Mon, 06/12/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை