மக்கள் வங்கி யூனியன் பிளேஸ் கிளை ஏற்பாட்டில் வெசாக் பாராயணம் ஓதல்

மக்கள் வங்கியின் யூனியன் பிளேஸ் கிளையில் வெசாக் போயா தினத்தன்று 'கீதாஞ்சலி வெசாக் பாராயணம் ஓதல்' என்ற வெசாக் பக்தி பாடல் ஓதல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புத்த பிரானின் பிறப்பு, ஞானம் மற்றும் முக்தி ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் வெசாக் தினத்தில் இப்பாராயணம் நடைபெற்றது.

வெசாக் வலயத்தில் அமைந்த, யூனியன் பிளேஸ் கிளையில் வெசாக் பாராணய இசைப்பாடல் இடம்பெற்றதுடன், மக்கள் வங்கியின் கொழும்பு தெற்கு பிராந்தியத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மக்கள் வங்கியின் ஏதுகல்புர கிளையைச் சேர்ந்த எரந்தி முனசிங்க பாடல் வரிகளை எழுதியுள்ளார். இசையமைப்பையும் பாடலுக்கான பயிற்சியையும் கொழும்பு யசோதரா வித்தியாலயத்தின் இசை ஆசிரியர் ரவ்னித்ரா சப்பரமாது மற்றும் கொழும்பு 02, பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் இசை ஆசிரியர் லால் ரூபசிங்க ஆகியோர் மேற்கொண்டனர்.

மேலும், இக்கிளை வெசாக் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதுடன், மக்களுக்கு கோப்பி மற்றும் பிஸ்கட் போன்றன வழங்கி உபசரிக்கப்பட்டது.

மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொதுமுகாமையாளர் கிளைவ் பொன்சேகா, முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொதுமுகாமையாளர் ரஞ்சித் கொடித்துவக்கு, கொழும்பு மாநகரசபையின் மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன, மக்கள் வங்கியின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரி நாலக விஜயவர்தன, கொழும்பு தெற்கு பிராந்திய முகாமையாளர் மாதவ கனக ஹேவகே மற்றும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில விஜேமான்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன் மக்களில் பெருந்திரளானோரும் கலந்து கொண்டனர்.

Thu, 05/18/2023 - 13:06


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை