எவரெஸ்ட் சிகரத்தை 27 முறைகள் ஏறி சாதனை

உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை 27ஆவது முறையாக ஏறி நேபாளத்தைச் சேர்ந்த 53 வயதாகும் காமி ரீட்டா ஷெர்பா சாதனை படைத்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக மலையேற்ற வழிகாட்டியாக இருந்துவரும் காமி ரீட்டா, 29 ஆயிரத்து 29 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை முதன்முதலில் 1994ஆம் ஆண்டு அடைந்தார்.

எவரெஸ்ட் சிகரத்தில் அதிக முறை ஏறியவர் என்ற பெருமையை பெற்றுள்ள ரீட்டா ஷெர்பா, சாதனைகள் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எதையும் செய்யவில்லை என்றும், வழிகாட்டியாக பணிபுரிந்ததால் அது தானாக நடந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எவரெஸ்ட் மட்டுமல்லாது, காட்வின் ஒஸ்டன், லேட்சே, மனஸ்லு, சோ ஓயு ஆகிய சிகரங்களிலும் ஏறி காமி ரீட்டா ஷெர்பா சாதனை படைத்துள்ளார்.

Thu, 05/18/2023 - 14:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை