நீதிபதிகளின் சம்பளத்திற்கு வரி விலக்கு; மனுக்கள் விசாரணை ஐவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில்

நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரி அறவிடும் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்கள்,ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்கப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் உள்ளடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழுவினரே,இத்தீர்மானத்தை எடுத்துள்ளனர். இதையடுத்து, இந்த ரிட் மனுக்கள் எதிர்வரும் (22) திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை, நீதிபதிகளின் சம்பளத்தில் அறவிடப்படும் வரியை நீக்குவதற்கு விடுக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை, அத்தினம் வரை நீடிப்பதற்கும் நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளது. இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சங்கம் மற்றும் இலங்கை நீதிமன்ற அதிகாரிகளின் சங்கம் ஆகியவற்றினால் மேற்படி ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 03/17/2023 - 07:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை