கல்மடு குளப்பகுதியில் மணல் அகழ்வுகளை தடுக்க நடவடிக்கை

அமைச்சர் டக்ளஸ் நேரடி விஜயம்

கிளிநொச்சி, கல்மடு குளம் பகுதியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் அகழ்வுகளில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிர கவனம் செலுத்தியுள்ளார். கல்மடுகுளம் பகுதிக்கு கள விஜயத்தை

மேற்கொண்ட அமைச்சர், குளத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.இதன்போது, சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடப்பட்டது.

'நீர்ப்பாசன செழுமை' எனும் திட்டத்துக்கமைய உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் கல்மடு குளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை (15) பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம், இத்திட்டத்தை பூரணப்படுத்துவதற்கு மேலதிகமாக 300 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் 500 மில்லியன் ரூபா நிதியை இத்திட்டத்துக்காக உலக வங்கி ஒதுக்கியிருந்தும் மேலும், 300 மில்லின் ரூபா தேவைப்படுமெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. கல்மடு குளம் புனரமைக்கப்பட்டு, 18 அடியிலிருந்து 26 அடி உயரமாக உயர்த்தப்படுகிறது.இதனால், இப்பகுதியைச் சேர்ந்த 75 இற்கு மேற்பட்ட நன்னீர் மீன்பிடி குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும். மேலும்,இரண்டாயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனங்களை மேற்கொள்ளவும் இதனூடாக வழி பிறக்கிறது. இத்திட்டத்தை, எதிர்வரும் மழை காலத்திற்கு முன்னர் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Fri, 03/17/2023 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை