பருப்பு, ரின்மீன் குறைந்த விலையில் விற்பனை

ச.தொ.சவிற்கு 600கோடி ரூபா நட்டம்

அதிக விலையில் பருப்பு மற்றும் ரின் மீன் ஆகியவற்றை கொள்வனவு செய்து நுகர்வோருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்தமையினால் சதொச நிறுவனத்திற்கு 600கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிக விலையில் இவற்றைப் பெற்று நுகர்வோருக்கு ஒரு கிலோ பருப்பை 89ரூபா விலை குறைவாகவும் ரின் மீன் ஒன்றை 110ரூபா விலை குறைவாகவும் விற்பனை செய்தமையினாலேயே 600கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கிணங்க 154ரூபாவுக்கு ஒரு கிலோ பருப்பு கொள்வனவு செய்யப்பட்டு அதனை 65ரூபாவுக்கு விற்றுள்ளதுடன் 210ரூபாவுக்கு ரின் மீனை கொள்வனவு செய்து அதனை 100ரூபாவுக்கு சதொச மூலம் விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கடந்த கொரோனா கால சூழ்நிலையில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கிணங்கவே இந்த இரண்டு பொருட்களும் இவ்வாறு குறைந்த விலையில் சதொச மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Mon, 09/26/2022 - 08:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை