ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57 வது மாநாடு பிலிப்பைன்ஸில் இன்று ஆரம்பம்

மாநாட்டிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை

இலங்கையில் நடத்தப்படவிருந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57வது மாநாடு நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகள் காரணமாக பிலிப்பைன்ஸ் மணிலா நகரில் இன்று 26ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இலங்கையின் சார்பில் நிதியமைச்சரான ரணில் விக்கிரமசிங்க அந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதுடன் மாநாட்டிற்கு தலைமைதாங்கவுமுள்ளார். இந்த மாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசேகரவும் கலந்துகொள்ளவுள்ளார்.

மணிலா நகரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 68அங்கத்துவ நாடுகள் பங்கேற்கவுள்ளன.

ஆசிய பிரதிநிதிகள் 49பேரும் ஏனைய நாடுகளிலிருந்து 19பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த மாநாட்டின் இறுதித் தினமான 30 ஆம் திகதி மாநாட்டின் தலைமைப் பதவி ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படவுள்ளது. இலங்கைக்கு வழங்கப்படும் அந்த தலைமைப்பதவி இரண்டு வருடங்களுக்கு நடைமுறையிலிருக்கும். மேற்படி மாநாட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அங்கத்துவ நாடுகளின் நிதியமைச்சர்கள் மத்திய வங்கி ஆளுநர்கள் உள்ளிட்ட நிதியமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 09/26/2022 - 08:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை