மீண்டும் ஏவுகணையை ஏவியது வடகெரியா

வடகொரியா அடையாளம் தெரியாத புவியீர்ப்பு ஏவுகணை ஒன்றைப் பாய்ச்சியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுகுறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் வடகொரியா ஏவுகணையைப் பாய்ச்சியுள்ளது.  

கிழக்குக் கடலில் அது பாய்ச்சப்பட்டதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்தது. ஜப்பானும் அதை உறுதிப்படுத்தியது. 

பியோங்யாங் பாய்ச்சிய ஏவுகணை ஏற்கனவே விழுந்துவிட்டதாக ஜப்பான் கூறியது. 

வடகொரியா நீர் மூழ்கிக் கப்பலிலிருந்து குறுந்தொலைவு  ஏவுகணையைப் பாய்ச்சியிருக்கலாம் என்று தென்கொரியா முன்னர் கூறியிருந்தது. 

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக்-இயோல், வடகொரியாவின் தூண்டுதல் நடவடிக்கைக்கு ஏற்ப உடனே  செயல்படும்படி இராணுவத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். 

வடகொரியா கடந்த ஆண்டு 8 ஏவுகணைகளைச் சோதித்தது. ஆனால் இந்த ஆண்டில் மட்டும் 30க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை பாய்ச்சியுள்ளது.

Mon, 09/26/2022 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை