வெளிநாட்டு பெண் மீது பாலியல் துன்புறுத்தல்

யாழ். காரைநகரில் 10 பேர் அதிரடி கைது
 
யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகர் கசூரினா கடற்கரைக்கு ஸ்பெயின் நாட்டு பெண் ஒருவர் சுற்றுலா வந்திருந்த போது அங்கு போதையில்இருந்த ஒரு குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் போதையில் இருந்த 10 பேரை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 
 
Sat, 09/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை