79 வயது யானை நேற்று உயிரிழப்பு

 
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்த ‘பந்துல’ என்ற யானை உயிரிழந்துள்ளது. உடல்நலக்குறைவுதான் இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யானை திடீரென தரையில் வீழ்ததையடுத்து, கால்நடை மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சையளித்துள்ளனர். இதன்போது யானை ஏற்கனவே இறந்துவிட்டதாக உயிரியல் பூங்கா வட்டாரங்கள் தெரிவித்தன.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 1949 முதல் வசித்து வந்த “பந்துல” என்ற இந்த யானை தனது 79 வது வயதில் உயிரிழந்துள்ளது.

Sat, 09/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை