திரிபோஷவில் எந்தவித நச்சுத் தன்மையும் இல்லை

திரிபோஷ நிறுவனம் உறுதிபட தெரிவிப்பு
 
நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷ தயாரிப்புகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அஃப்லாடாக்சின் இரசாயனம் இல்லை என ஸ்ரீலங்கா திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரிபோஷவின் தரம் குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் திரிபோஷ உட்கொள்வது பாதுகாப்பானது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. திரிபோஷவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடாக்சின் உள்ளது என்பது நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன,

தாய்மார்கள் மத்தியில் அச்சத்தை பரப்புவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதை இது என்றும் நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் உணவுப் பற்றாக்குறை சூழ்நிலையில் இதுபோன்ற போலியான அறிக்கைகள் தாய்மார்களின் மனநிலையை குலைத்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திரிபோஷ தொடர்பில் திருப்தியடைந்த தாய்மார்கள் உள்ளனர். எனவே, திரிபோஷ உண்ணுவதற்கு அச்சப்பட வேண்டாம் என அவர் தாய்மார்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். திரிபோஷ தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவாக என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Sat, 09/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை