சீன கட்டட இடிபாட்டில் பலரும் சிக்கித் தவிப்பு

மத்திய சீனாவில் இடிந்துவிழுந்த கட்டடத்தில் பல டஜன் பேர் சிக்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிர் தப்பியோரைத் தேடி மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

எட்டு மாடிகள் கொண்ட இடிந்த கட்டடத்தில் ஹோட்டல் ஒன்று, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் திரையரங்கு ஒன்று இருந்துள்ளது. ஹுனான் மாகாணத்தின் சங்ஷா நகரில் இருக்கும் இந்தக் கட்டடம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது.

தொடர்ந்து 23 பேர் சிக்கி இருப்பதோடு மேலும் 39 பேரின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக சங்ஷா மேயர் தெரிவித்துள்ளார். இதுவரை எந்த உயிரிழப்பும் பதிவாகாத நிலையில் இடிபாடுகளில் இருந்து ஐவர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒன்பது பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் நேற்று தெரிவித்தனர். கட்டடத்தின் உரிமையாளரும் கட்டடத்தின் வடிவமைப்பு, கட்டுமானம் ஆகியவற்றுக்கு பொறுப்பான மற்ற மூவரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாகச் சங்ஷா பொலிஸார் தெரிவித்தனர்.

Mon, 05/02/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை