பாகிஸ்தானில் மற்றுமொரு போலியோ சம்பவம் பதிவு

பாகிஸ்தானில் இரண்டாவது போலியோ தொற்று சம்பவம் வடக்கு வசிரிஸ்தானில் இரண்டு வயது சிறுமி ஒருவரிடம் பதிவாகியுள்ளது. இதனை சுகாதார அமைச்சின் பேச்சாளரும் உறுதி செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே மற்றொரு தொற்று சம்பவம் பதிவாகியுள்ளது. நாட்டில் மேலும் போலியோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்து சுகாதார அமைச்சு கவலையை வெளியிட்டுள்ளது.

போலியோ தொற்றை ஒழிப்பதற்காக அவசர அடிப்படையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் அப்துல் காதிர் படேல் தெரிவித்துள்ளார். அண்மைய ஆண்டுகளில் போலியோ வேகமாக குறைந்து வந்த நிலையில் அண்டைய நாடான ஆப்கானுடன் உலகில் போலியோ பாதிப்பு உள்ள நாடாக பாகிஸ்தான் தொடர்ந்து நீடிக்கிறது.

Mon, 05/02/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை