எரிபொருள் விலையை அதிகரிக்க தயாராவதாக பொய் பிரசாரம்

எரிசக்தி அமைச்சர் காஞ்சன தெரிவிப்பு

 

எரிபொருளில் விலைகள் அதிகரிக்கப்படலாம் என பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானதென்றும் அவ்வாறான எந்தவித தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்றும் எரிசக்தி மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என பரப்பப்பட்ட தகவல்களுக்கிணங்க நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினமும் நாடளாவிய எரிபொருள் நிலையங்களில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக பெருமளவில் மக்கள் கூடியிருந்தனர். அதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படப் போவதாக சில சமூகவலைத்தளங்களில் தன்னிச்சையான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. அதனையடுத்து எரிபொருள் நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக பெருமளவு மக்கள் திரண்டிருந்தனர். எனினும் அவ்வாறு எரிபொருளில் விலையை மேலும் அதிகரிப்பதற்கு இதுவரை எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.​ அதேவேளை, மேற்படி தன்னிச்சையான செய்திகளை நம்பி மக்கள் எரிபொருளை சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் அமைச்சர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 04/26/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை