உலகின் வயதானவர் மரணம்

உலகின் வயதானவராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஜப்பானியப் பெண் தனது 119 ஆவது வயதில் காலமானார்.

கானே டனகா என்ற அந்தப் பெண் 1903 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி ஜப்பானின் தென்மேற்கு புக்குவாகோ பிராந்தியத்தில் பிறந்தார். அதே ஆண்டில் தான் ரைட் சகோதரர்கள் முதல் முறை வானில் பறந்ததோடு முதல் பெண்மணியாக மேரி கியுரி நோபல் விருதி வென்றார்.

டனகா அண்மைக் காலம் வரை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பராமரிப்பு இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.

தனது இளமைக் காலத்தில் நூடுல் கடை மற்றும் அரிசி கேக் கடை உட்பட பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டிருக்கும் டனகா சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன் 1922 ஆம் திகதி ஹிடியோ டனகா என்பவரை திருமணம் செய்துள்ளார். அவர் நான்கு குழந்தைகளை பெற்றிருப்பதோடு ஐந்தாவதாக ஒரு குழந்தையை தத்தெடுத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டிலேயே அவர் உலகின் வயதானவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். அப்போது வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் எது என்று கேட்கப்பட்டபோது, “இப்போது” என்று பதலிளித்திருந்தார்.

உலகின் மிக வயது முதிர்ந்த மக்கள்தொகை கொண்ட நாடாக ஜப்பான் இருப்பதாக உலக வங்கி தரவு குறிப்பிடுகிறது. அங்கு 28 வீதமானவர்கள் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாவர்.

டனகாவின் மரணத்தை அடுத்து உலகின் மிக வயதானவராக பிரான்ஸ் நாட்டு கன்னியாஸ்திரி லுசிலே ரன்டொன் பதிவாகியுள்ளார். அவருக்கு 118 வயதாகும். இதில் வயதான ஜப்பானிய பெண்ணாக 115 வயது புசா டட்சுமி உள்ளார். அவர் உலகின் ஐந்தாவது வயதானவராக சாதனை பட்டியலில் உள்ளார்.

கின்னஸினால் உறுதி செய்யப்பட்ட உலகில் இதுவரை வாழ்ந்த வயதானவர் என்ற சாதனை பிரான்ஸ் நாட்டு பெண்ணான ஜீன் லுவிஸ் கல்மன் வசமுள்ளது. 1997 ஆம் ஆண்டு அவர் இறக்கும்போது அவரது வயது 122 ஆண்டுகள் மற்றும் 164 நாட்களாக இருந்தது.

Tue, 04/26/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை