கட்டுப்பாடின்றி விலைகள் உயர்வதை கட்டுப்படுத்த பொறிமுறை

கட்டுப்பாடின்றி பொருட்களின் விலைகள் உயர்வதை கட்டுப்படுத்த உகந்த பொறிமுறையொன்றை தயாரிக்க வர்த்தக அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

விலைக்கட்டுப்பாடின்றி பொரு ட்களின் விலைகள் அதிகரிப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

கடந்த காலத்தில் விநியோக வலையமைப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. வர்த்தக நிலைமை அரச கட்டுப்பாட்டுக்கு அப்பால் சென்றுள்ளது. சில மொத்த வர்த்தகர்களும், வர்த்தக நிறுவனங்களும் நினைத்தவாறு கட்டுப்பாடின்றி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் நிலை கடந்த காலத்தில் காணப்பட்டது. அதற்காக முன்னெடுத்த தீர்வுகளின் போது சிலர் பொருட்களை மறைக்க முற்பட்டனர். அதனால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. உகந்த பொறிமுறையொன்றை உருவாக்க புதிய வர்த்தக அமைச்சர் செஹான் சேமசிங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பங்களிப்புடன் எதிர்காலத்தில் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஆவன செய்யப்படும் என்றார்.(பா)

ஷம்ஸ் பாஹிம்

Wed, 04/27/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை