ஆங் சான் சூக்கியின் மொத்த சிறை காலம் 11 வருடங்கள்

இராணுவ ஆட்சியின் கீழ் மியன்மாரின் முன்னாள் தலைவி ஆங் சான் சூக்கி மீது நீதிமன்றம் ஒன்று ஊழல் குற்றச்சாட்டில் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இதன்மூலம் அவரின் மொத்த சிறை தண்டனை காலம் 11 வருடங்களாக அதிகரித்துள்ளது.

மியன்மாரில் 2021 பெப்ரவரியில் ஜனநாயக முறையில் தேர்வான அரசுக்கு எதிராக இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சி தொடக்கம் சூக்கி வீட்டுக்காவலில் இருந்து வருகிறார்.

நோபல் பரிசு வென்ற 76 வயதான சூக்கி மீது வாக்கு மோசடி உட்பட குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்திருப்பதோடு இந்த வழக்கு வெட்ககரமானது என்று உரிமைக் குழுக்கள் கண்டித்துள்ளன.

இந்நிலையில் தலைநகர் நாய் பியி டவ்வில் மூடிய அறையில் கடந்த புதனன்று இடம்பெற்ற இந்த வழக்குத் தொடர்பில் ஊடகங்களுக்கு பேசுவதிலிருந்து சூக்கியின் வழக்கறிஞர்கள் தடுக்கப்பட்டனர்.

யாங்கோனின் முன்னாள் தலைவரிடம் 600,000 டொலர் லஞ்சம் பெற்றதாகவே சூக்கி குற்றங்காணப்பட்டுள்ளார்.

Thu, 04/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை