வர்த்தக பொருட்களின் தகவல்களை வைத்திருப்பது அவசியம்; அதி விசேட வர்த்தமானி

அனைத்து உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களும் தமது விநியோகத்தரின் பெயர், முகவரி, கொள்வனவு திகதி, விலை, பொருட்களின் வகை, அளவு, தொகுதி எண், பற்றுச்சீட்டு ஆகியவற்றை தமது உடைமையில் வைத்திருக்க வேண்டும் என அறிவித்து, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த நடைமுறையை பேணாவிடின், குறித்த பொருட்களை விற்பனை செய்யவோ களஞ்சியப்படுத்தவோ, சேகரிக்கவோ, காட்சிப்படுத்துவதோ, விநியோகிக்கவோ முடியாது என, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 04/27/2022 - 23:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை