விதுர விக்கிரமநாயக்க, பிரேமநாத் தொலவத்த ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவிப்பு    

பொதுஜன பெரமுனவின் ஒழுக்க விதிகளை மீறி 'சரியான பாதை' என்ற மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த மற்றும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆகியோருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு தீர்மானம் எடுப்பது அவசியமென கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பொதுஜன பெரமுன கட்சியானது தனியான அரசியல் கட்சியாக வினைத்திறன் மற்றும் தனித்துவத்தை தக்கவைத்துக்கொண்டுள்ள கட்சியாகும்.

இத்தகைய நிலையில் வேறு ஒரு கட்சியுடன் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த மற்றும் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆகியோருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

அது தொடர்பில் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் கலந்துரையாடி தீர்மானமொன்றை மேற்கொள்வர் என்றும் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Sat, 03/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை