ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம்

நேற்று இரவு ஆரம்பம்?

ஐ.நா.மனித உரிமைப்பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் நேற்று இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.

இலங்கை நேரப்படி நேற்று இரவு 9.00 மணியளவில் இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பான அறிக்கையை உத்தியோகப்பூர்வமாக வெளியிடுவதன் மூலம் அதன் சாராம்சம் ஒன்றை பேரவையில் முன்வைப்பாரென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறும் என்பதுடன் மிச்சேல் பச்லேட் இலங்கை தொடர்பான அறிக்கையை முன்வைத்ததன் பின்னர் பதிலளிக்கவேண்டிய நாடு என்ற வகையில் இலங்கை தூதுக்குழுவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இலங்கை தொடர்பான விவாத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளதாகவும் அதேபோன்று சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு என்பவனவற்றின் பிரதிநிதிகளும் இலங்கை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

Sat, 03/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை