டயலொக்கின் மாற்றுத் திறனாளிகளுக்கான மொபைல் தொழில்நுட்பங்கள்

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மாற்றுத் திறனாளிகளுக்கான மொபைல் தொழில்நுட்பங்களை அதிகளவில் அணுகவும் பயன்படுத்தவும் மற்றும் சமூக மற்றும் பொருளாதார உள்ளடக்கத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் GSMA (கைபேசி இணைப்பு செயற்பாட்டாளர்களின் உலகளாவிய தொழில் அமைப்பு) எனும் நிறுவனத்தினால் வழிநடத்தப்படுகின்ற 'அசிஸ்டிவ் டெக்' எனும் திட்டத்தினூடே டிஜிட்டல் கட்டமைப்பொன்றை இயக்குவதற்கான திட்டத்தில் இணைந்துள்ளது.

மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பங்குபெறுவதற்கும் உதவித் தொழில்நுட்பத்திற்கான அணுகல் வழிமுறையானது பெரிதும் முக்கியத்துவம் பெறுவதால், புதுமைகளினூடே டிஜிட்டல் உள்ளடக்கிய இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு டயலொக் உறுதிபூண்டுள்ளது. செவிகேளாதோர் மற்றும் பேச்சு குறைபாடுடையோர் ஆகியோர்களுக்கான விசேட நிலையமாக செயற்படுகின்ற இரத்மலானையில் அமைந்துள்ள செவிகேள் குறைபாடுடையோர்களுக்கான மத்திய நிலையம் மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பேச்சு சிகிச்சை மத்திய நிலையம் போன்றவற்றினூடாக டயலொக் வழங்குகின்ற தொழிநுட்ப ரீதியிலான சேவை முன் முயற்சிகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

இந்நிலையங்கள் செவிப்புலன் மற்றும் பேச்சு குறைபாடுகள் போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு மையங்களாக இயங்கி வருகின்றன. எவ்வித கட்டணமும் அறவிடாமல் இந்நிலையங்களினூடாக சேவைகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. குறைந்த வருமானம் பெறுவோருக்கும், மாணவர்களுக்கும் இந்நிலையங்கள் மிகவும் பயனுடையதாக அமைந்துள்ளன. டயலொக்கின் மற்றுமொரு முன்முயற்சியாக கருதக்கூடிய petralex (பெட்றாலெக்ஸ்) என்பதானது பயனர்களின் பொதுவான பாவனையிலுள்ள வயர் தொடர்புள்ள 'ஹெட்செட்(headset) மற்றும் 'ப்ளூடூத் ஹெட்செட்' (bluetooth headset) ஆகியவற்றில் செவிப்புலன் திறனை மேம்படுத்தத்தக்க வகையில் பயன்படக்கூடிய ஒரு சாதனமாகும். இது செவித்திறன் ஸ்கிரீனிங் சோதனைகளை செயல்படுத்தவும் தனிப்பயனாக்கப்பட்ட செவிப்புலனை மேம்படுத்தும் சாதனமாக பயன்படுத்தவும் உதவுகிறது.

Wed, 03/02/2022 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை