கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் (28) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த வீதியின் அருகில் உள்ள வாய்க்காலில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்

நேற்று முன்தினம்(28-) பிற்பகல் சம்பவ இடத்துக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் சடலத்தை பார்வையிட்ட பின் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கட்டளையிட்டார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நகரத்தை சேர்ந்த கந்தையா நவ சீலன் (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர் தொழில் நிமித்தம் சம்பவிடத்திற்கு அருகில் உள்ள மரக்காலை ஒன்றில் வேலை செய்து வந்ததாகவும் அறியமுடிகின்றது. கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.-

 

(பரந்தன் குறூப் நிருபர்)

Wed, 03/02/2022 - 06:00


from tkn

1 கருத்துகள்

புதியது பழையவை