DFCC வங்கியின் அதிசிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விளம்பர பிரசாரம் SLIM DIGIS 2.1 விருதுகள்

DFCC வங்கி, DFCC Virtual Wallet ஐ மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட அதன் அதிசிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விளம்பர பிரசாரமான “Salli Athin Allanne Na” க்காக சமீபத்தில் SLIM DIGIS 2.1 விருதுகள் நிகழ்வில் finalist ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 வேகமாகப் பரவியதன் காரணமாக, பணத்தாள்களின் பயன்பாடு பணப் பரிவர்த்தனைகளுக்கு விருப்பத்திற்குரிய ஒரு தெரிவாக இல்லாத காலகட்டத்தில், இந்த பிரசாரம் சரியான நேரத்தில் DFCC வங்கியின் டிஜிட்டல் பணப்பையை (Digital Wallet) வாடிக்கையாளர்களிடையே வேகமாக கொண்டு போய் சேர்த்தது. DFCC வங்கியானது SLIM DIGIS விருதுகள் நிகழ்வில் பங்குபற்றிய முதல் நிகழ்வாக இது அமைகிறது. தேசிய தளத்தில் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரசாரத்தின் தலைசிறந்த முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

DFCC வங்கியின் புத்தாக்கமான டிஜிட்டல் பணப்பை மற்றும் வங்கிச்சேவை தீர்வுக்கான பிரச்சாரமான, DFCC Virtual Wallet, வங்கிச்சேவை மற்றும் நிதிப் பிரிவில் சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விளம்பர பிரசாரத்திற்கான இறுதிப் போட்டியாளர்களிடையே (finalists) அங்கீகரிக்கப்பட்டது. SLIM DIGIS விருதுகள் வழங்கும் விழா தலவத்துகொட மொனார்க் இம்பீரியலில் அனைத்து தொழில்துறையினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 400 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு இடம்பெற்றது. வங்கியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட டிஜிட்டல் மற்றும் படைப்பாக்க முகவர் நிறுவனங்களான Loops Digital மற்றும் Storybook ஆகியவையும் இந்த விளம்பர பிரசாரத்திற்கான அவர்களின் பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டன.

Wed, 03/02/2022 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை