தடுப்பிலுள்ள அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை

அமைச்சர் அலி சப்ரி உறுதியளிப்பு

 

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் 27 பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாகவும் இது  தொடர்பிலான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்போது திருத்தப்படுகின்றது. எதிர்காலத்தில் அதனை முழுமையாக மாற்றியமைக்கும் திட்டமும் இருக்கின்றது என்றும் அத்துடன் அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லை. அவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Tue, 02/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை