ஒமிக்ரோன் வைரஸ் திரிபு: பயோஎன்டெக் நம்பிக்கை

பைசர்–பயோஎன்டெக் நிறுவனங்களின் கொவிட் –19 தடுப்புமருந்து ஒமிக்ரோன் வைரஸ் திரிபு கடுமையாகப் பாதிக்கப்படுவதிலிருந்து வலுவான பாதுகாப்பு அளிக்கக்கூடும் என பயோஎன்டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உகர் சாஹின் கூறியுள்ளார்.

தடுப்பூசியின் செயல்திறனை ஒமிக்ரோன் பாதிக்குமா என்பதைக் கண்டறிய ஆய்வுகள் நடைபெறுவதாக அவர் கூறினார். அதன் மூலம், புதிய தடுப்புமருந்து தேவைப்படுமா என்பதை நிர்ணயிக்கலாம் என்றார் அவர். மேம்படுத்தப்பட்ட தடுப்புமருந்தை உருவாக்கும் பணிகளில் தற்போது பயோஎன்டெக் ஈடுபட்டுள்ளது. எனினும் அது தேவைப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை என்று சாஹின் குறிப்பிட்டார்.

பூஸ்டர் என்ற மூன்றாவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதும் ஒமிக்ரோன் திரிபுக்கு எதிராகப் பாதுகாப்பு அளிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். பைசர், பயோஎன்டெக் நிறுவனங்கள் ஆல்பா, டெல்டா ஆகிய வகை வைரஸ் திரிபுகளுக்கு எதிராக தடுப்புமருந்தை ஏற்கனவே உருவாக்கிவிட்டன. அவை சோதிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம், ஒமிக்ரோன் வைரஸுக்கு எதிரான தடுப்புமருந்துக்கு 3 முதல் 4 மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

Thu, 12/02/2021 - 13:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை