கொவிட்–19 மாத்திரைக்கு அமெரிக்காவில் ஒப்புதல்

கொவிட்–19 வைரஸ் தொற்றால் அதிகப் பாதிப்புக்கு ஆளாகும் சாத்தியமுள்ளோருக்கு மெர்க் நிறுவனத்தின் மாத்திரை மூலம் சிகிச்சையளிக்க அமெரிக்கச் சுகாதார நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு மோல்னுபிரவீர் மாத்திரை மூலம் சிகிச்சையளிப்பது எளிமையானது. ஒமிக்ரோன் உட்படப் புதிதாக உருமாறும் வைரஸ்களுக்கு எதிரான செயல்திறன் கொண்டதாக அந்த மாத்திரை கருதப்படுகிறது.

மோல்னுபிரவீர மாத்திரைக்கு பிரிட்டன் ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது.

வைரஸ் தொற்று அறிகுறி தெரியவந்ததும் 5 நாள் அந்த மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் நோயாளிகள் உயிரிழப்பதையும் மாத்திரை பாதியாகக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.

அவசரகாலத்தில் மாத்திரையைப் பயன்படுத்த அமெரிக்கா விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று தெரிகிறது.

Thu, 12/02/2021 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை