கொவிட் தொற்றாளர் தொகையில் அதிகரிப்பு

நாளாந்த தொகை 700க்கு மேல் பதிவு

நாளாந்த கொவிட்19 தொற்றாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால், புத்தாண்டு காலப்பகுதியில் பொருட்களின் கொள்வனவில் ஈடுபடும் பொதுமக்கள் சுகாதார நடைமுறையை உரியவகையில் பேணுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டை முடக்குவதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லையென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினத்தில் 744 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் புதுவருட கொத்தணியுடன் தொடர்புடையவர்களென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரையில் கொவிட்19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,64,733 ஆக அதிகரித்துள்ளது.

 

Fri, 12/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை