புலிகள் புதைத்த தங்கத்தை தோண்டியெடுக்க முயற்சி

விசாரணைகள் CIDயிடம் ஒப்படைப்பு

போர்ச் சூழலில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்ட தங்கத்தை இரகசியமாக தோண்டியெடுப்பதற்கு முயற்சித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போர்க்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதுக்குடியிருப்பு பகுதியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்கம், நீதிமன்ற உத்தரவுக்கமைய கடந்த மாதம் 25 ஆம் திகதி தோண்டி எடுக்கப்படவிருந்தது. எனினும், மாவீரர்கள் வாரம் காரணமாக அந்த அகழ்வுப் பணிகள் (02) வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. கடந்த 23 ஆம் திகதி இப் பகுதியில் நிலத்தை தோண்டுவதற்கு சிலர் முயற்சித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றவர்களில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் இணைப்புச் செயலாளர் ஒருவரும் அடங்குகின்றார்.

விசாரணைகள் நிறைவுபெறும் வரை இந்த உத்தியோகத்தரின் பணியை இடைநிறுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸிடம் வினவியபோது, நீதிமன்ற உத்தரவின்றி இக்காணிக்குள் நுழைந்தமை தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக கூறினார்.

 

 

Fri, 12/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை