எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரினும் இ.போ.சபையின் பாதகமான செயற்பாடுகளை மாற்ற முடியாது

ஒழுங்கற்ற பொறிமுறை என அமுனுகம விசனம்

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கை போக்குவரத்து சபையில் காணப்படும் பாதகமான செயற்பாடுகள் மற்றும் ஒழுங்கற்ற பொறிமுறையை மாற்ற முடியாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.குறிப்பாக தகுதியற்றவர்கள் இலங்கை போக்குவரத்து சபையில் நியமனம் பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக, முறையான நடைமுறைக்கு அமைவாக இலங்கை போக்குவரத்து சபை பதவிகளுக்கு பொருத்தமானவர்களை மாத்திரம் நியமிக்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தலையீடுகளை அதிகளவில் கண்டுகொள்ளக்கூடிய இடமாக இலங்கை போக்குவரத்து சபையை அடையாளப்படுத்த முடியும் என தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அரசாங்கங்கள் மாறியவுடன் பதவிகளும் அதிவேகமாக மாறுவதாகவும் சுட்டிக்காட்டினார். நடத்துநர் டிப்போ கண்காணிப்பாளராகவும், டயர் மாற்றிய தொழிலாளி டிப்போ பொறியியளாளராகவும் மாறுதல் போன்ற பதவி மாற்றங்கள், அரசாங்கம் மாறிய உடனேயே இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் கூறினார்.

Tue, 12/07/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை