பீஜிங் ஒலிம்பிக்கை லிதுவேனியா இராஜதந்திர ரீதியில் புறக்கணிப்பு

சீனாவின் மனித உரிமை விவகாரம் பற்றி கவலை வெளியிட்டிருக்கும் லிதுவேனியா 2022 பீஜிங் குளிர்கால ஒலிப்பிக்கை இராஜதந்திர ரீதியில் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

2022 பீஜிங் ஒலிம்பிக்கில் லித்துவேனிய ஜனாதிபதி அல்லது அமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று சீனாவுடனான பாராளுமன்றங்களுக்கு இடையிலான கூட்டணி தெரிவித்துள்ளது.

சீனாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் காரணமாக இந்த ஒலிம்பிக் போட்டியை புறக்கணிப்பது குறித்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆலோசித்து வருகின்றன.

சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மற்றும் ஹொங்கொங்கில் ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் முடக்கப்படுவதற்கு எதிராக மனித உரிமை செயற்பாட்டாளர்களின் குரல் வலுத்து வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் லிதுவேனியாவில் தாய்வான் பிரதிநிதித்துவ அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டதை அடுத்து சீனா மற்றும் லிதுவேனியா இடையிலான உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் கடந்த ஓகஸ்டில் சீனா தனது லிதுவேனிய தூதுவரை திரும்ப அழைத்துக் கொண்டதோடு கடந்த செப்டெம்பரில் லிதுவேனியாவும் பரஸ்பரம் நடவடிக்கை எடுத்தது.

Tue, 12/07/2021 - 12:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை