இலங்கை இராணுவத்தின் 59ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே

இலங்கை இராணுவத்தின் 59ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே-Major General Vikum Liyanage Appointed as New Chief of Staff of the Sri Lanka Army

இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் விகும் லியனகே இலங்கை இராணுவத்தின் 59ஆவது பிரதம அதிகாரியாக (Chief of Staff of the Sri Lanka Army) நியமிக்கப்பட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் திகதி முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினதும், பாதுகாப்பு அமைச்சினதும் பரிந்துரைக்கு அமைய பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் 58ஆவது பிரதம அதிகாரியாக இதுவரை காலமும் சேவையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா இராணுவத்திலிருந்து அண்மையில் ஓய்வுபெற்றுச் சென்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே 59ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத்தின் கஜபா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் விகும் லியனகே, இறுதியாக இராணுவ தொண்டர் படையணியின் கட்டளை தளபதியாக சேவையாற்றி வந்தார்.

இராணுவத்தின் பல்வேறு உயர் பதவிகளை வகித்த இவர் மாத்தளை விஜய கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸாதிக் ஷிஹான்

Tue, 12/07/2021 - 12:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை